என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி..அன்புடன் ஆனந்த் ...

Sunday, September 8, 2013

2020ல் ஒலிம்பிக் போட்டி: டோக்கியோ நகரில் நடக்கிறது

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், 2020ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது.
சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலின் (ஐஓசி) 125-வது கூட்டம் ஆர்ஜெண்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸில் நடக்கிறது. நேற்றைய கூட்டத்தில் 2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்தும் நகரத்தை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது.
 http://www.dinakaran.com/data1/DNewsimages/Tamil-Daily-News_43082392216.jpg

இதில், இறுதி வாய்ப்பை பெற்ற டோக்கியோ, இஸ்தான்புல் மற்றும் மேட்ரிட் நகரங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. முதல் சுற்று வாக்கெடுப்பில் மேட்ரிட் நகரம் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற 2ஆவது சுற்று வாக்குப்பதிவில், இஸ்தான்புல், டோக்கியோ இடையே கடும் நெருக்கடி காணப்பட்ட போதிலும், இறுதியில் ஜப்பான் தலைநகர் டோக்கியோ 60 வாக்குகள் பெற்று, 2020ல் ஒலிம்பிக்கை நடத்தும் வாய்ப்பை தட்டிச் சென்றது. இஸ்தான்புல் நகருக்கு 36 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. இதன் மூலம், ஜப்பான் நான்காவது முறையாக ஒலிம்பிக் போட்டியை நடத்துகிறது.
அணு உலை விபத்து காரணமாக, 2020ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி முன்னிலையில், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே விளக்கமளித்தார்.